Ceylon Students Educational Fund
  • Home
  • About
    • Mission
    • Team
    • Contact Us
  • Donate
  • Join Today!
  • Blog
  • Sign In
Join Today!

Upcoming Events

No current events

Recent Posts

  • Covid-19 impact on Students in Srilanka by Letchumanan Murugapoopathy
  • Hello !
Ceylon Students Educational Fund

Covid-19 impact on Students in Srilanka by Letchumanan Murugapoopathy

Posted on July 1, 2021 by CSEFJuly 1, 2021

இலங்கையில் சமகால இடர்களினால் கல்வித்துறைக்கு நேர்ந்துள்ள பாதிப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கம், உலகெங்கும் பரவிவந்துள்ள கொடிய
கொரோனோ வைரஸ் தொற்றினால் எமது இலங்கையும் பெரிதும்
பாதிப்படைந்துள்ளது.
சமகாலத்தில் இந்த கொரோனோ தொற்றுடன் திரிபடைந்த டெல்டா என்ற தொற்றும்
பரவிவரும் அபாயம் நேர்ந்துள்ளது.
சமூக இடைவெளிபேணல் – பயணத்தடை – அடிக்கடி நடைமுறைக்கு வரும் ஊரடங்கு
உத்தரவு முதலான காரணிகளினால் அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் கல்வியும்
பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளது.
சமகாலத்தில் பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியற்
கல்லூரிகளும் சீராக இயங்கமுடியாத சூழ்நிலை தோன்றியுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வசதி வாய்ப்புகளுடன் இயங்கும் கல்லூரிகளிலும்
கற்கும் மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள் போதிக்கப்பட்டாலும், (
Online studies ) சாதாரண பாடசாலை மாணவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு
வசதிகள் இல்லை.
அத்துடன் பயணத்தடை உட்பட பல்வேறு பிரச்சினைகளினால், இலங்கையில் மக்கள்
தமது அன்றாட தேவைகளுக்காக உணவுப்பொதிகளையும் உலர்
உணவுப்பொதிகளையும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஊடாக பெறவேண்டிய
நிலைக்கும் ஆளாகியுள்ளனர்.
இதனால் வறுமைக்கோட்டில் வாழும் ஏழை மாணவர்களின் உடல் ஆரோக்கியமும்
பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையை கவனத்தில் கொண்டு எமது இலங்கை
மாணவர் கல்வி நிதியம் ( C . S. E. F) கடந்த ஆண்டு முதல் கட்டமாக
அங்கிருக்கும் தொடர்பாளர் அமைப்புகளின் ஊடாக எமது நிதியத்தின் உதவியை
பெற்றுவரும் மாணவர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை
வழங்கியது.
சமகால இடரினால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தையும்
தாண்டியுள்ளது.
அத்துடன் தொற்றாளர்களாக பல்லாயிரம்பேர் இனங்காணப்பட்டு
சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டுக்கான க. பொ. த. உயர்தரப்பரீட்சை ( G. C. E. A/L ) எதிர்வரும்
ஒக்டோபர் மாதம் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கொரொனோ நெருக்கடியிலிருந்து அனைத்து மக்களும், மாணவர்களும்
முழுமையாக பாதுகாக்கப்படவேண்டும் என்பதும் எமது கல்வி நிதியத்தின்
வேண்டுதலாகும்.

GoToOlder PostAll PostsBlog

Comments are closed.

  • Home
  • Contact Us
  • Membership
  • Events
Membership website powered by MembershipWorks